கிரிக்கெட்

ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர் மிதாலி ராஜ் மேலாளர் தாக்கு + "||" + Harmancred Kaur Captain is not eligible for the post Mithali Raj Manager stabilized

ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர் மிதாலி ராஜ் மேலாளர் தாக்கு

ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர் மிதாலி ராஜ் மேலாளர் தாக்கு
இந்திய அணியின் சீனியர் வீராங்கனை மிதாலி ராஜ் உடல் தகுதியுடன் இருந்தும் அரைஇறுதி ஆட்டத்தில் சேர்க்கப்படாதது விமர்சனத்துக்கு உள்ளானது.

புதுடெல்லி, 

வெஸ்ட்இண்டீசில் நடந்து வரும் 6–வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஆடாத இந்திய அணியின் சீனியர் வீராங்கனை மிதாலி ராஜ் உடல் தகுதியுடன் இருந்தும் அரைஇறுதி ஆட்டத்தில் சேர்க்கப்படாதது விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கு இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பதிலளிக்கையில், ‘ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நாங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றோம். அதனால் தான் அந்த வெற்றி கூட்டணியை மாற்றாமல் அரைஇறுதியில் விளையாட முடிவு செய்தோம். எனவே மிதாலி ராஜிக்கு இடம் கிடைக்காமல் போனது. எந்த முடிவு எடுத்தாலும் அணியின் நலனுக்காகவே நாங்கள் எடுக்கிறோம்’ என்று விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மீது, மிதாலி ராஜின் மேலாளர் அனிஷா குப்தா டுவிட்டரில் கடுமையான தாக்குதல் தொடுத்துள்ளார். அவர் தனது பதிவில், ‘ஹர்மன்பிரீத் கவுர் சூழ்ச்சிகாரர், பொய்யர், முதிர்ச்சியற்றவர், ஏமாற்றுக்காரர், கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர். துரதிருஷ்டவசமாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகம் விளையாட்டை விடவும் அரசியலை நம்புகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் சில மணி நேரங்களில் அந்த பதிவு நீக்கம் செய்யப்பட்டது. ‘அந்த பதிவு தன்னுடையது தான். மிதாலி ராஜ் மோசமாக நடத்தப்பட்டதால் இவ்வாறு பதிவிட்டேன்’ என்று அனிஷா குப்தா தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கடனுக்கு பெட்ரோல் கொடுக்காததால் ஊழியர்கள் மீது தாக்குதல் 3 பேருக்கு வலைவீச்சு
கபிஸ்தலம் அருகே கடனுக்கு பெட்ரோல் தர மறுத்ததால் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்களை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
2. மனைவியுடன் கள்ளத்தொடர்பு; நண்பனை கட்டையால் தாக்கி கொலை - விடுதி ஊழியர் கைது
மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனை கட்டையால் தாக்கி கொலை செய்த விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
3. தாராபுரத்தில் கொங்கு மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு
தாராபுரத்தில் கொங்கு மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
4. பஸ்சில் இடம் பிடிப்பதில் தகராறு: இரட்டையர்கள் மீது தாக்குதல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
பஸ்சில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரட்டையர்களை தாக்கியதாக கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கூத்தாநல்லூர் அருகே தந்தை-தாய் மீது தாக்குதல் கொத்தனார் கைது
கூத்தாநல்லூர் அருகே தந்தை மற்றும் தாயை தாக்கிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.