கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி வங்காளதேச அணி அபார வெற்றி முதலாவது டெஸ்ட் போட்டி 3–வது நாளிலே முடிவுக்கு வந்தது + "||" + West Indies fall The Bangladesh team is a great success

வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி வங்காளதேச அணி அபார வெற்றி முதலாவது டெஸ்ட் போட்டி 3–வது நாளிலே முடிவுக்கு வந்தது

வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி வங்காளதேச அணி அபார வெற்றி முதலாவது டெஸ்ட் போட்டி 3–வது நாளிலே முடிவுக்கு வந்தது
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிட்டகாங், 

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலாவது டெஸ்ட்

வங்காளதேசம்–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடந்தது. முதல் இன்னிங்சில் முறையே வங்காளதேச அணி 324 ரன்னும், வெஸ்ட்இண்டீஸ் அணி 246 ரன்னும் எடுத்தன. இதனை அடுத்து 78 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 2–வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்து இருந்தது.

நேற்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 2–வது இன்னிங்சில் 35.5 ஓவர்களில் 125 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மக்முதுல்லா 31 ரன்கள் எடுத்தார். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் தேவேந்திர பிஷோ 4 விக்கெட்டும், ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டும், ஜோமெல் வாரிகன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

வங்காளதேசம் அபார வெற்றி

பின்னர் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. வங்காளதேச வீரர்களின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட்இண்டீஸ் அணி 35.2 ஓவரில் 139 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் வங்காளதேச அணி 64 ரன்கள் அபார வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுனில் அம்ப்ரிஸ் 43 ரன்னும், ஜோமெல் வாரிகன் 41 ரன்னும், ஹெட்மயர் 27 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

வங்காளதேச அணி தரப்பில் தைஜூல் இஸ்லாம் 6 விக்கெட்டும், ‌ஷகிப் அல்–ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். முதல் இன்னிங்சில் 120 ரன்கள் குவித்த வங்காளதேச வீரர் மொமினுல் ஹக் ஆட்டநாயகன் விருது பெற்றார். உள்ளூரில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக வங்காளதேச அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

‌ஷகிப் அல்–ஹசன் சாதனை

இந்த போட்டியில் வங்காளதேச அணியின் ஆல்–ரவுண்டர் ‌ஷகிப் அல்–ஹசன் 2–வது இன்னிங்சில் கீரன் பவெல் விக்கெட்டை வீழ்த்திய போது அது அவரது 200–வது விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகள் சாய்த்த முதல் வங்காளதேச வீரர் என்ற பெருமையை ‌ஷகிப் அல்–ஹசன் பெற்றார். அத்துடன் டெஸ்ட் போட்டியில் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையை ‌ஷகிப் அல்–ஹசன் படைத்தார். அவர் 54 டெஸ்ட் போட்டிகளில் இந்த இலக்கை கடந்தார். இதற்கு முன்பு இங்கிலாந்து வீரர் இயான் போத்தம் 55 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல் கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது.

இரு அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 30–ந் தேதி டாக்காவில் தொடங்குகிறது.