கிரிக்கெட்

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி + "||" + Women's T20 World Cup Cricket; Australia won by 8 wickets

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
நார்த் சவுண்ட்,

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் விளையாடின.  இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

இதனை அடுத்து விளையாடிய அந்த அணியில் அதிக அளவாக டி.என். வியாட் (43), எச். நைட் (25) ரன்கள் எடுத்தனர்.  மற்ற வீராங்கனைகள் பியூமோன்ட் (4), ஏ. ஜோன்ஸ் (4), என். சிவர் (1), எல். வின்பீல்டு (6), டங்க்ளி (0), ஏ. ஷ்ரப்சோல் (5), டி. ஹேசல் (6), எஸ். எக்கிளஸ்டோன் (4) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  கே.எல். கார்டன் (1) ஆட்டமிழக்கவில்லை.

அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் ஹீலி (22), மூனி (14) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  கார்டனெர் (33), லேனிங் (28) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 15.1 ஓவரில் 106 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.  இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.