கிரிக்கெட்

மகளுடன் தமிழில் பேசும் டோனி + "||" + Tony speaking in Tamil with her daughter

மகளுடன் தமிழில் பேசும் டோனி

மகளுடன் தமிழில் பேசும் டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி, ஆஸ்திரேலிய 20 ஓவர் தொடரில் ஆடாததால் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

ராஞ்சி, 

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி, ஆஸ்திரேலிய 20 ஓவர் தொடரில் ஆடாததால் தற்போது ஓய்வில் இருக்கிறார். தனது மகள் ஸிவாவுடன் நேரத்தை செலவிட்டு வரும் அவர், மகளுக்கு சில தமிழ் வார்த்தைகளையும் கற்றுக்கொடுத்துள்ளார். படுக்கையில் இருந்தபடி அவர் மகளுடன் கொஞ்சி பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ஸிவா, ‘எப்படி இருக்கீங்க’ என்று தமிழில் தனது தந்தையிடம் கேட்கிறார். அதற்கு டோனி, ‘நல்லா இருக்கேன்’ என்று தமிழில் பதில் அளிக்கிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் டோனி, சென்னை தனது 2–வது சொந்த ஊர் என்று அடிக்கடி சொல்வார். அதன் தாக்கத்தால் அவருக்கு தமிழ் மீது அதிக பற்றுதல் உண்டு.