கிரிக்கெட்

உலக மகளிர் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு + "||" + Harmanpreet Kaur named captain of Women's World T20 XI

உலக மகளிர் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு

உலக மகளிர் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு
உலக மகளிர் 20 ஓவர் அணியின் கேப்டனாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பை

சர்வதேச மகளிர் 20 ஓவர்  உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியுள்ளது. இந்த தொடரின் அடிப்படையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் 20 ஓவர்  உலகக் கோப்பை அணி தேர்வு செய்யப்பட்டது.

இதற்காக அமைக்கப்பட்ட இயான் பிஷப், அஞ்சும் சோப்ரா, எபானி ரெயின்போர்ட் பிரெண்ட்,  மெலிண்டா பேரெல்ல, ஐசிசியின் பொதுமேலாளர் ஜியாப் அலார்டிஸ் ஆகியோரைக் கொண்ட குழு  தேர்வு செய்தது.

இந்த அணிக்கு, இந்திய மகளிர் 20 ஓவர்  கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மந்தனா, பூனம் யாதவ் ஆகிய இரண்டு வீராங்கனைகளும் இந்த அணிக்கு தேர்வாகியுள்ளனர்.

மேலும் 3 இங்கிலாந்து வீராங்கனைகளும் 2 ஆஸ்திரேலிய வீராங்கனைகளும் பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் இருந்து தலா ஒரு வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அணி விவரம்:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன், இந்தியா), அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா), மந்தனா (இந்தியா), எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர், இங்கிலாந்து), தீயண்ட்ரா டோட்டின் (வெஸ்ட் இண்டீஸ்), ஜவேரியா கான் (பாகிஸ்தான்), எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா), லீக் காஸ்பெர்க் (நியூசிலாந்து), அன்யா (இங்கிலாந்து), கிறிஸ்டி கார்டன் (இங்கிலாந்து), பூனம் யாதவ் (இந்தியா). 12 வது வீராங்கனை, ஜஹானரா ஆலம் (பங்களாதேஷ்)