கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து + "||" + England won by 42 runs

டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து

டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.
கொழும்பு, 

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 336 ரன்களும், இலங்கை 240 ரன்களும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன்  தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 69.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. 

பின்னர் 327 ரன்கள் இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை தாரைவார்த்து 53 ரன்களுடன் ஊசலாடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில், 4-வது நாள் ஆட்டம் துவங்கியதும் சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட்டுகளை தாரைவார்க்க துவங்கியது. 86.4 ஓவர்கள் விளையாடிய இலங்கை 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 

இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்று ஒயிட் வாஷ் இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரனில் விக்ரமசிங்கே
இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
2. இங்கிலாந்தில் வாழும் இந்திய பெண்ணுக்கு 4 ஆண்டு ஜெயில் : புற்றுநோய் இருப்பதாக கூறி பணம் வசூலித்து மோசடி
இங்கிலாந்து நாட்டில் உள்ள லாக்பாரோக் நகரில் வசித்து வந்தவர் ஜாஸ்மின் மிஸ்திரி (வயது 36). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் 2013–ம் ஆண்டு அப்போதைய அவரது கணவர் விஜய் கடெச்சியாவிடம் தனக்கு மூளை புற்றுநோய் இருப்பதாக கூறினர்.
3. இலங்கை பிரதமராக நாளை மீண்டும் பதவியேற்கிறார் ரனில் விக்ரமசிங்கே?
இலங்கை பிரதமராக மீண்டும் ரனில் விக்ரமசிங்கே பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
5. பதவி விலக ராஜபக்சே முடிவு : இலங்கையில் 17-ந் தேதிக்குள் புதிய பிரதமர் தேர்வு - அதிபர் சிறிசேனா தகவல்
இலங்கையில் 17-ந் தேதிக்குள் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் எனவும், ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக்கும் திட்டம் இல்லை எனவும் அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.