கிரிக்கெட்

இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து + "||" + Indian team practice cricket: The first day was canceled due to rain

இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து
இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்டில் குறுக்கிட்ட மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
சிட்னி,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


இதன்படி இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் காலையில் இருந்தே மழை கொட்டியதால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.

மழை விட்ட பின்னர் ஆடுகளத்தை ஆய்வு செய்த நடுவர்கள் மாலையில் ஆட்டத்தை தொடங்க திட்டமிட்டனர். இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இன்றும் சிட்னியில் மழை பெய்ய 50 சதவீத வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெஸ்ட் போட்டி தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு போதிய பயிற்சி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம், நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர்.
2. காரைக்குடி பகுதியில் பலத்த மழை சாலைகளில் வெள்ளம் போல் ஓடிய மழைநீர்
காரைக்குடி பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
3. மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவை காந்திநகரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு புதுவை மாவட்ட கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4. இந்தியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி 356 ரன்கள் குவிப்பு
இந்தியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது.
5. திருச்சியில் பலத்த மழை: விமானம் இறங்கும் போது இறக்கை தரையில் தட்டியதாக பரபரப்பு
திருச்சியில் பலத்த மழையால் விமானம் தரை இறங்கும் போது, இறக்கை தரையில் தட்டியதாக விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.