கிரிக்கெட்

லோகேஷ் ராகுலுக்கு பாங்கர் அறிவுரை + "||" + Bangar advised to Lokesh Rahul

லோகேஷ் ராகுலுக்கு பாங்கர் அறிவுரை

லோகேஷ் ராகுலுக்கு பாங்கர் அறிவுரை
லோகேஷ் ராகுலுக்கு பாங்கர் அறிவுரை
பயிற்சி களத்தை சரியாக பயன்படுத்தி 5 இந்திய வீரர்கள் அரைசதம் விளாசியது திருப்தி அளித்தாலும், லோகேஷ் ராகுல் பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறுவது அணி நிர்வாகத்துக்கு கவலை அளித்துள்ளது.

இது குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறுகையில் ‘லோகேஷ் ராகுல் நல்ல நிலையில் தான் உள்ளார். ஆனால் அவர் ‘அவுட்’ ஆவதற்கு புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து கொள்கிறார் என்பது தான் பிரச்சினை. இந்த ஆட்டத்தில் கூட பந்து அவரை விட்டு விலகியே சென்றது. அதனை அவர் தேவையில்லாமல் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் பார்முக்கு வர ஒரு நல்ல இன்னிங்ஸ் அமைந்தால் போதும். அவரது திறமை என்ன என்பது எங்களுக்கு தெரியும். அவர் களத்தில் முழு திறமையை வெளிக்காட்டி ரன்கள் குவிப்பது அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். அவர் இன்னும் இளம் வீரர் அல்ல. ஆஸ்திரேலியாவுக்கு 2-வது முறையாக வந்துள்ளார். மேலும் 30 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடி இருக்கிறார். எனவே அவருக்கு பொறுப்பு உள்ளது. அணியில் தனது பங்களிப்பை உணர்ந்து பொறுப்புடன் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

தொடக்க வீரர் மற்றும் 6-வது வீரர் வரிசையில் நமக்கு பிரச்சினை இருக்கிறது. அந்த வரிசையில் யாரை களம் இறக்குவது என்பதை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். அந்த வரிசையில் யாரை விளையாட வைப்பது என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார்.