கிரிக்கெட்

காயம் காரணமாக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இருந்து பிரித்வி ஷா நீக்கம் + "||" + India vs Australia: Prithvi Shaw Suffers Ankle Injury, In Doubt For Adelaide Test

காயம் காரணமாக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இருந்து பிரித்வி ஷா நீக்கம்

காயம் காரணமாக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இருந்து பிரித்வி ஷா நீக்கம்
கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் பிரித்வி ஷா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கமாட்டார்.
சிட்னி,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. 

டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவனுடன், இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.

இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான பயிற்சி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று, இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா கணுக்காலில் காயம் அடைந்தார். 

கேட்ச் ஒன்றை பிடிக்க முற்பட்ட போது, கணுக்காலில் காயம் அடைந்து வேதனையில் துடித்தார். இதையடுத்து, உடனடியாக மருத்துவ குழுவினரின் உதவியுடன் மைதானத்தை விட்டு பிரித்வி ஷா வெளியேறினார். இதனால், வரும் வியாழக்கிழமை அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. மவுன அஞ்சலி செலுத்தும் போது அமைதியாக இருக்குமாறு ரசிகர்களை கேட்டுக்கொண்ட கோலி
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தும்போது சப்தம் போட்ட ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு விராட் கோலி கேட்டுக்கொண்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...