கிரிக்கெட்

விராட் கோலியை எங்களது பவுலர்கள் கட்டுப்படுத்துவார்கள் - டிராவிஸ் ஹெட் + "||" + Our bowlers will control Virat Kohli - Travis Head

விராட் கோலியை எங்களது பவுலர்கள் கட்டுப்படுத்துவார்கள் - டிராவிஸ் ஹெட்

விராட் கோலியை எங்களது பவுலர்கள் கட்டுப்படுத்துவார்கள் - டிராவிஸ் ஹெட்
விராட் கோலியை எங்களது பவுலர்கள் கட்டுப்படுத்துவார்கள் என டிராவிஸ் ஹெட் கூறினார்.
அடிலெய்டு,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 6-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய இடக்கை ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


இந்திய கேப்டன் விராட் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. அவரை எங்களது பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். அவர், மூன்று அதிவேக பந்து வீச்சாளர்களை (ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ்) சந்திக்க வேண்டியது இருக்கும். போதுமான நெருக்கடி கொடுத்தால் நிச்சயம் தவறிழைத்து ஆட்டம் இழந்து விடுவார். இதை செய்வதற்குரிய பவுலர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.

‘இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இடக்கை ஆட்டக்காரர்களுக்கு எதிராக நன்றாக பந்து வீசக்கூடியவர், அதை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்’ என்று கேட்கிறீர்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரது பந்து வீச்சை சந்தித்து இருக்கிறேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பவுலிங்கை அதிகமாக சந்தித்த அனுபவம் கிடையாது. அதே சமயம் சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ளக்கூடிய பேட்ஸ்மேன்கள் எங்களது அணியில் உள்ளனர். பயிற்சி ஆட்டத்தின் போது அஸ்வினின் பந்து வீச்சை நீல்சன் (சதம் அடித்தவர்) சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தார். அதனால் அஸ்வினை சமாளிப்பது குறித்து நீல்சனிடம் பேசி அறிந்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கோலி கணிப்பு இந்தியாவுக்கே பலித்தது!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முந்தைய மாதம் இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையே ஒரு நாள் தொடர் ஒன்று இங்கிலாந்தில் நடந்தது. அந்த தொடரில் 4 ஆட்டங்களில் இரு அணிகளும் சேர்ந்து 7 முறை 340 ரன்களுக்கு மேல் குவித்து மலைக்க வைத்தன.
2. கோலிக்கு ராசி இல்லாத உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டங்கள்
உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் கோலிக்கு உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் மட்டும் ராசியே இல்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
3. ஆட்டத்தின் முதல் 45 நிமிடங்கள், இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை -விராட் கோலி
ஆட்டத்தின் முதல் 45 நிமிடங்கள், இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
4. நீல நிற ஜெர்சி அணிந்து விளையாடுவதே பெருமை - விராட் கோலி
நீல நிற ஜெர்சி அணிந்து விளையாடுவதே பெருமையாக கருதுகிறோம் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
5. வரலாறு படைத்தார் விராட் கோலி
உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி வரலாறு படைத்தார்.