கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி 229 ரன்கள் சேர்ப்பு + "||" + Last Test against Pakistan: New Zealand score 229 runs

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி 229 ரன்கள் சேர்ப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி 229 ரன்கள் சேர்ப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 229 ரன்கள் சேர்த்துள்ளது.
அபுதாபி,

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கனே வில்லியம்சன் 89 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் ஜீத் ராவல் 45 ரன்னும், கிரான்ட்ஹோம் 20 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆனார்கள். விக்கெட் கீப்பர் வாட்லிங் 42 ரன்னுடனும், வில்லியம் சோமர்விலி 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டும், பிலால் ஆசிப் 2 விக்கெட்டும், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்ரிடி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. வான்வெளி மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.344 கோடி இழப்பு ; இந்தியாவிற்கு அதிகமாக இருக்கலாம்?
வான்வெளி மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.344 கோடி இழப்பு ; இந்தியாவிற்கு அதிகமாக இருக்கலாம் என பாகிஸ்தான் மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
2. தலையொட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்
தலையொட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்.
3. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழையால் வெள்ளம்: 28 பேர் பலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலியாகியுள்ளனர்.
4. நிதி நெருக்கடியிலும் அணு ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் : இந்திய பாதுகாப்பு துறை எச்சரிக்கை
நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அதிகப்படுத்தி வருவதோடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை குறிவைத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
5. தனது நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி
தனது நாட்டு வான் பரப்பில் பயணிகள் விமானம் பறக்க பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.