கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீஸ் வீரர் கெய்லுக்கு ரூ.1½ கோடி இழப்பீடு - ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் உத்தரவு + "||" + West Indies player Gail gets Rs.1.5 crore compensation - The Australian Supreme Court has ordered

வெஸ்ட்இண்டீஸ் வீரர் கெய்லுக்கு ரூ.1½ கோடி இழப்பீடு - ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் உத்தரவு

வெஸ்ட்இண்டீஸ் வீரர் கெய்லுக்கு ரூ.1½ கோடி இழப்பீடு - ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் உத்தரவு
வெஸ்ட்இண்டீஸ் வீரர் கெய்லுக்கு ரூ.1½ கோடி இழப்பீடு வழங்க ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற வெஸ்ட்இண்டீஸ் அணியின் உதவி மசாஜ்தெரபிஸ்டாக பணியாற்றிய பெண், சிட்னியில் அந்த அணியினர் தங்கி இருந்த அறைக்குள் சென்ற போது கிறிஸ் கெய்ல் தான் உடுத்தி இருந்த துண்டை கழற்றி விட்டு இங்கு எதை பார்க்க வந்தாய்? என்று ஆபாசமாக பேசியதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேர்பேக்ஸ் மீடியா குழுமம் செய்தி வெளியிட்டது.

இதனை அடுத்து கெய்ல், ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மெக்கல்லம் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் கெய்ல் மீது குற்றம்சாட்டி வெளியிட்ட செய்தியை உண்மை என்று நிரூபிக்கவில்லை என்று கடந்த அக்டோபர் மாதம் தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார். ஆனால் இழப்பீடு தொகை விவரம் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இழப்பீடு தொகை நேற்று அறிவிக்கப்பட்டது. கெய்லுக்கு பேர்பேக்ஸ் நிறுவனம் ரூ.1.52 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக அப்பீல் செய்யப்போவதாக பேர்பேக்ஸ் மீடியா குழுமம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஓய்வு முடிவை மாற்றினார், கெய்ல்: மேலும் ஒரு தொடரில் பங்கேற்க போவதாக அறிவிப்பு
ஓய்வு முடிவை மாற்றிய கெய்ல், மேலும் ஒரு தொடரில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார்.
2. வெஸ்ட்இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல்
வெஸ்ட்இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல் இடம் பிடித்துள்ளார்.