ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் ஒரே திசையில் அடித்த இளம் வீரர்


ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் ஒரே திசையில் அடித்த இளம் வீரர்
x
தினத்தந்தி 4 Dec 2018 11:31 AM GMT (Updated: 4 Dec 2018 11:31 AM GMT)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை ஒரே திசையில் விளாசி அசத்தியுள்ளார்.

நியூசவுத்வேல்ஸ் மெட்ரோ கேப்டன் ஆலி டேவிஸ் ஆஸ்திரேலிய தேசிய ஒருநாள் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான  கிரிக்கெட்டில் நாதர்ன் டெரிடரி அணிக்கு எதிராக சாதனை இரட்டைச் சதம் அடித்ததோடு ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்த சாதனையையும் நிகழ்த்தினார்.

ஆலி டேவிஸ் 115 பந்துகளில் 207 ரன்களை விளாசி அசத்தினார். இதில் 2வது சதம் 39 பந்துகளில் விளாசப்பட்டது. இதனையடுத்து நியூசவுத்வேல்ஸ் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு  406  ரன்கள் எடுத்து  இமாலய ரன் குவிப்பை நிகழ்த்தியது.

18 வயதான ஆலி டேவிஸ்  17 சிக்சர்களை விளாசினார். இதில் 102 ரன்கள் வந்து விட்டது.  இதில் 40வது ஓவரை வீசிய ஜேக் ஜோன்ஸ் என்ற ஸ்பின்னரின் 6 பந்துகளிலும் சிக்சர் பறக்க விட்டார். இந்த இன்னிங்சில் 14 பவுண்டரிகளும் அடங்கும்.

இந்த தொடர் ஒருநாள் தொடராக மாற்றப்பட்ட பிறகு முதன் முதலாக இரட்டைச் சதம் அடித்துள்ளார் ஆலி டேவிஸ். இவருடன் ஆடிய  சாம் ஃபேனிங் 109 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார்.  இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்காக 278 ரன்கள் விளாசினர்.

தொடர்ந்து 407 ரன்கள் இலக்குடன்  இறங்கிய  நாதர் டெரிடரி அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து படுதோல்வி அடைந்தது.


Next Story