கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்:அசார் அலி அரைசதம் அடித்தார் + "||" + Last Test against New Zealand: Azhar Ali scored half century

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்:அசார் அலி அரைசதம் அடித்தார்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்:அசார் அலி அரைசதம் அடித்தார்
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது.
அபுதாபி, 

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி தொடக்க நாளில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர்கள் பிலால் ஆசிப் 5 விக்கெட்டுகளும், யாசிர் ஷா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை நிதானமாக ஆடிய பாகிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 61 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்துள்ளது. அசார் அலி 62 ரன்களுடனும், ஆசாத் ஷபிக் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய 38 வயதான முகமது ஹபீஸ் டக்-அவுட் ஆனார். இந்த போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், தொடர்ந்து குறுகிய வடிவிலான போட்டிகளில் (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) கவனம் செலுத்த போவதாகவும் ஹபீஸ் அறிவித்துள்ளார். 55-வது டெஸ்டில் ஆடும் ஆல்-ரவுண்டரான ஹபீஸ் இதுவரை 10 சதங்கள் உள்பட 3,644 ரன்கள் எடுத்துள்ளார்.