கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம் + "||" + IND vs AUS: india is in a deep trouble, after loses a virat kohli wicket

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.
அடிலெய்டு, 

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதன்படி, பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இருவருமே தடுமாறினர். ஹேசல்வுட் வீசிய பந்தில், ராகுல் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரத்தில், முரளி விஜயும் 11 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை தாரை வார்த்தார். 

இந்திய அணி பெரிதும் நம்பியிருக்கும் கேப்டன் விராட் கோலியும் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து பட் கம்மின்ஸ் பந்தில்  காவ்ஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர். ரகானே 13 ரன்களில் வெளியேறினார்.  அடித்து விளையாடிய ரோகித் சர்மா 61 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 37 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

4-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய புஜாரா, நிதானத்துடனும் நிலைத்து நின்றும் ஆடி வருகின்றார். இந்திய அணி 39 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்களுடன் தடுமாறி வருகிறது. புஜாராவும், ரிஷாப் பாண்டும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 222 ரன்களில் ஆல் -அவுட்
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 222 ரன்கள் எடுத்துள்ளது.
2. உங்கள் ஈகோவை நீக்குங்கள்: விராட் கோலி படிக்கும் புத்தகம்
இந்திய கேப்டன் விராட் கோலி உங்கள் ஈகோவை நீக்குங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
3. கருப்பு பட்டை அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று விளையாடுவார்கள் என பிசிசிஐ தகவல்
அருண் ஜெட்லியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இரங்கல் தெரிவித்துள்ளார்.
4. இந்தியா-பிரான்ஸ் இடையே கடல்சார் விழிப்புணர்வு, திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் மோடியின் பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கடல்சார் விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
5. இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் முதலாவது டெஸ்ட் போட்டி: டாஸ் போடுவதில் தாமதம்
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.