கிரிக்கெட்

அடிலெய்டு டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் + "||" + India bag a 15-run lead despite Head's 72

அடிலெய்டு டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்

அடிலெய்டு டெஸ்ட்:  முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் ஆனது.
அடிலெய்டு,

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி புஜாராவின் சதத்தால் (123 ரன்) சரிவில் இருந்து தப்பித்ததுடன், முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்திருந்தது.


இதையடுத்து,  தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி , இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக அஷ்வின் சுழலில் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினார். இதனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரைவார்த்த ஆஸ்திரேலிய அணி, 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்  88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்த நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஏறக்குறைய அரைமணி நேரம் வரை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்டம்  நடைபெற்றது.  மிட்செல் ஸ்டார்க் 15 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். 91.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 204 ரன்கள் எடுத்து இருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது.  இதனால்,  ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

இதைத்தொடர்ந்து மழை விட்டதும் மீண்டும் போட்டி துவங்கியது.  ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை அளித்து வந்த டிராவிஸ் ஹெட் 72 ரன்களில்  சமி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹேசல்வுட், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதன் முலம் ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் இந்திய அணியை விட  ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் பின் தங்கியுள்ளது. இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் , இஷாந்த் சர்மா,  சமி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். 15 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது சிறுவன்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 வயது சிறுவன் பிரிட்டனின் இளவரசி டயானாவின் மறுபிறவி என்று வினோதமாகக் கூறி வருகிறான்.
2. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சந்திப்பு
நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
3. உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா - வங்காளதேசம் ஆட்டம் மழையால் பாதிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
4. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், கருணைக்கொலைக்கு சட்டப்பூர்வமான அங்கிகாரம் வழங்கப்பட்டது.
5. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானுக்கு 308 ரன்கள் வெற்றி இலக்கு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு 308 ரன்களை ஆஸ்திரேலியா வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.