கிரிக்கெட்

அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? : ஸ்ரீசாந்த் குமுறல் + "||" + BCCIs Life Ban Sentence Too Harsh S Sreesanth Tells Supreme Court

அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? : ஸ்ரீசாந்த் குமுறல்

அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? : ஸ்ரீசாந்த் குமுறல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் ஆகிய வீரர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவில் 2015 ஆம் ஆண்டு ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இதையடுத்து தனது வாழ்நாள் தடையை நீக்கக் கோரி கேரள ஐகோர்ட்டில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த நீதிமன்றம் தடையை நீக்க மறுத்து விட்டது. பின்னர் அவர் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதி, தடையை ரத்து செய்தார். இதனை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில்  இந்திய கிரிக்கெட் வாரியம் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்  ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை தொடரும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்  ஸ்ரீசாந்த் அப்பீல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நேற்று வந்தது.

அப்போது ஸ்ரீசாந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித், ஸ்ரீசாந்துக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடை அதிகப்படியானது. அவருக்கு இப்போது 36 வயது. அவரால் இனி உள்ளூர் போட்டிகளில் கூட விளையாட முடியாது. இப்போது, இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அவரை அதில் ஆட அனுமதிக்கவில்லை என்றால் அந்த வாய்ப்பும் பறிபோகும். அதனால் இடைக்கால தடையாவது விதித்து அவரை விளையாட அனுமதிக்க வேண்டும் என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடை விடுவிக்கப்பட்டது. அவரை ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கிறது. ஆனால் ஸ்ரீசாந்துக்கு மட்டும் அனுமதி மறுப்பது என்ன நியாயம் என்றும் அவர் கேட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி மூன்றாவது வாரத்துக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி: இந்தியா வரலாற்று வெற்றி தொடரை கைப்பற்றியது
ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி தொடர் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை புரிந்து உள்ளது.
2. சாதனைகளின் தலைவன் விராட் கோலி -முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டு
சாதனைகளின் தலைவன் விராட் கோலி என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டி உள்ளனர்.
3. ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது வீரர் மகேந்திர சிங் டோனி என்ற பெருமையை பெற்றார்.
4. இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள்
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
5. ”போட்டி முடிந்ததும் ஊருக்கு போயிறாத, வீட்டுக்கு வந்து என் குழந்தைகளை பாத்துக்கோ” ரிஷப் பண்டிற்கு ஆஸி கேப்டன் மனைவி அழைப்பு
இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்டிற்கு நேரமிருந்தால் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வருமாறு ஆஸ்திரேலிய கேப்டனின் மனைவி இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்துள்ளார்.