கிரிக்கெட்

கோலியை சீண்டிய லயன் + "||" + Kohli Taunted Lion

கோலியை சீண்டிய லயன்

கோலியை சீண்டிய லயன்
இந்திய கேப்டன் விராட் கோலியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த ஆஸ்திரேலிய பவுலர்கள் பல்வேறு வகையான யுக்திகளை கையாண்டனர்.
ந்திய கேப்டன் விராட் கோலியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த ஆஸ்திரேலிய பவுலர்கள் பல்வேறு வகையான யுக்திகளை கையாண்டனர். அடிக்கடி பவுன்சர்களையும் வீசினர். ஆனால் அவசரம் காட்டாமல் கோலி நிதான போக்கை பின்பற்றினார். இதையடுத்து அவரை சீண்டும் விதமாக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், காலை முன்னால் எடுத்து வைத்து பந்தை தடுத்து ஆடுவது எப்படி என்பதை கோலிக்கு சொல்லி கொடுப்பது போல அருகில் நின்று செய்து காட்டினார். அவரது இந்த சைகையை கோலி கண்டுகொள்ளாவிட்டாலும், கடைசியில் அவரது சுழலில் சிக்கிக் கொண்டார்.

முன்னதாக ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சின் போது உற்சாகத்தில் திளைத்த கோலி, பீல்டிங்கின் போது டான்ஸ் ஆடினார். நின்ற இடத்திலேயே சில நடன அசைவுகளை வெளிப்படுத்தினார். சில வினாடிகள் நீடித்த இந்த டான்ஸ் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.