கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரி + "||" + India vs Australia, 1st Test: Twitter bemused as Indian coach Ravi Shastri uses unparliamentary words on air

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி  டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரிக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது.
புதுடெல்லி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த  முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  அப்போது அவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்து உள்ளது.

தொலைக்காட்சி குழுவினர் மற்றும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கருடன் பேசியபோது, சாஸ்திரி இந்த கருத்துக்களை  தெரிவித்து உள்ளார்.  முன்னாள் வீரர்கள் மைக்கேல் கிளார்க் மற்றும் மார்க் புட்சரும் இருந்தனர். அவர்களுக்கு சாஸ்திரி கூறியது புரியவில்லை.

சிரித்துக் கொண்டே, கவாஸ்கர் அவர்களிடம்,  "இது ஒரு குடும்ப சேனல், நான் அதை மொழிபெயர்க்க முடியாது." என கூறினார். 

சாஸ்திரி ஒரு வெளிப்படையான நபர். இருந்தாலும் இந்த பேச்சு அதிகபடியானது என கருதப்படுகிறது. இது குறித்து  கிரிக்கெட் ரசிகர்கள் டுவிட்டரில் விமர்சித்து வருகிறார்கள். 


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி: இந்தியா வரலாற்று வெற்றி தொடரை கைப்பற்றியது
ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி தொடர் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை புரிந்து உள்ளது.
2. சாதனைகளின் தலைவன் விராட் கோலி -முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டு
சாதனைகளின் தலைவன் விராட் கோலி என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டி உள்ளனர்.
3. ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது வீரர் மகேந்திர சிங் டோனி என்ற பெருமையை பெற்றார்.
4. இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள்
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
5. ”போட்டி முடிந்ததும் ஊருக்கு போயிறாத, வீட்டுக்கு வந்து என் குழந்தைகளை பாத்துக்கோ” ரிஷப் பண்டிற்கு ஆஸி கேப்டன் மனைவி அழைப்பு
இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்டிற்கு நேரமிருந்தால் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வருமாறு ஆஸ்திரேலிய கேப்டனின் மனைவி இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்துள்ளார்.