பெண்கள் அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் கமிட்டி


பெண்கள் அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் கமிட்டி
x
தினத்தந்தி 11 Dec 2018 10:45 PM GMT (Updated: 11 Dec 2018 7:53 PM GMT)

பெண்கள் அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மும்பை,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் வருகிற 20-ந்தேதி மும்பையில் நடக்கிறது. சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பயிற்சியாளரை தேர்வும் செய்யும் பணியில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்ததால், முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் இடைக்கால கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டியில் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட், இந்திய முன்னாள் வீராங்கனை ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வார்கள். தென்ஆப்பிரிக்காவின் கிப்ஸ், இங்கிலாந்தின் ஓவைஸ் ஷா, இந்தியாவின் மனோஜ் பிரபாகர் உள்ளிட்டோர் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டு சர்ச்சையில் சிக்கிய ரமேஷ் பவாரும் மீண்டும் விண்ணப்பித்துள்ளார்.



Next Story