கிரிக்கெட்

10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மணிப்பூர் பவுலர் + "||" + Manipur bowler who has scored 10 wickets

10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மணிப்பூர் பவுலர்

10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மணிப்பூர் பவுலர்
மணிப்பூர் பவுலர் ஒருவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
அனந்தபுர்,

ஆந்திராவின் அனந்தபுரில் நடந்த கூச் பெஹார் கோப்பைக்கான (19 வயதுக்குட்பட்டோர்) கிரிக்கெட் போட்டியில் (4 நாள் ஆட்டம்) அருணாச்சலபிரதேசத்துக்கு எதிராக மணிப்பூர் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ரெக்ஸ் ராஜ்குமார் சிங் புதிய சாதனை படைத்தார். அவர் 2-வது இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பிரமிக்க வைத்தார். 9.5 ஓவர்கள் பந்து வீசி 6 மெய்டனுடன் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இந்த 10 விக்கெட்டுகளையும் சாய்த்தார். இதில் 5 வீரர்களை கிளன் போல்டு ஆக்கினார். 2 வீரர்கள் எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். 3 பேர் கேட்ச் முறையில் வெளியேறினர். இதனால் 2-வது இன்னிங்சில் அருணாச்சலபிரதேச அணி வெறும் 36 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 53 ரன்கள் இலக்கை மணிப்பூர் அணி விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்தது. 18 வயதான ரெக்ஸ் ராஜ்குமார், இந்த சீசனில் ரஞ்சி கிரிக்கெட்டில் மணிப்பூர் அணிக்காக அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய துப்பாக்கி சுடுதலில் மானுபாகெர்–சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது
12–வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) சாம்பியன்ஷிப் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது.
2. ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று இந்திய அணி சாதனை
தைபேயில் நடந்த 12வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மனு பேக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
3. பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி 42 ஆயிரம் கிலோ மீட்டர் கார் பயணம் கோவை பெண் சாதனை
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி 42 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணம் செய்து கோவையை சேர்ந்த பெண் சாதனை படைத்துள்ளார்.
4. புதுக்கோட்டையில் 33.3 அடி உயரத்தில் செயற்கை பல் கின்னஸ் சாதனையாக அறிவிப்பு
புதுக்கோட்டையில் 33.3 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை பல் கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டது.
5. ஜனவரியில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடி; 2 மாதங்களுக்கு பின் மீண்டும் சாதனை
நடப்பு ஆண்டின் ஜனவரியில் ஜி.எஸ்.டி. வருவாயானது ரூ.1 லட்சம் கோடியை எட்டியுள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.