கிரிக்கெட்

டோனி அணியில் மீண்டும் இடம் பிடிக்க உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் -மொகிந்தர் அமர்நாத் + "||" + MS Dhoni must play domestic cricket to stake his claim for a spot in the Indian team: Mohinder Amarnath

டோனி அணியில் மீண்டும் இடம் பிடிக்க உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் -மொகிந்தர் அமர்நாத்

டோனி அணியில் மீண்டும் இடம் பிடிக்க  உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் -மொகிந்தர் அமர்நாத்
இந்திய அணியில் டோனி மீண்டும் இடம் பிடிக்க வேண்டும் என்றால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியே ஆக வேண்டும் என்று முன்னாள் ஆல்ரவுண்டர் மொகிந்தர் அமர்நாத் கூறி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான மகேந்திரசிங் டோனி,  20 ஓவர் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால், ஓய்வு நேரத்தை தனது சொந்த ஊரான ராஞ்சியில் கழித்து வருகிறார்.

மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக 20 ஓவர்  மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து டோனி கழற்றி விடப்பட்டார். இந்திய அணியில் இவருக்கு இடம் கொடுப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதற்கிடையே, 1983-ல் உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஆட்டநாயகன் மொகிந்தர் அமர்நாத், எந்த ஒரு வீரரும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட வேண்டுமென்றால் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் கூறி இருப்பதாவது:-

ஒவ்வொருவரும் வித்தியாசமாக இருப்பார்கள். இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் மாநில அணியில் சிறப்பாக விளையாட வேண்டும். பிசிசிஐ, அணித் தேர்வு விதிமுறையில் மாற்றம் செய்ய வேண்டும். பல மூத்த வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. முந்தைய போட்டிகளில் சாதனைகள் படைத்திருக்கலாம், தற்போது பார்மில் இருப்பதே முக்கியம்” என்று அவர் கூறியுள்ளார்.