கிரிக்கெட்

கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது வங்காளதேசம் + "||" + In the last match, West Indies was defeated and one day was won by Bangladesh

கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்

கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்
கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒரு நாள் தொடரை வங்காளதேச அணி கைப்பற்றியது.
சியல்ஹெட்,

வங்காளதேசம்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சியல்ஹெட்டில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து 2-வது சதத்தை அடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் 108 ரன்களுடன் (131 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். சுழற்பந்து வீச்சாளர் மெஹதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளும், ஷகிப் அல்-ஹசன், மோர்தசா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். கடைசி ஓவரில் ஹெல்மெட்டில் பந்து தாக்கியதால் அதன் பிறகு பீல்டிங் செய்ய ஹோப் வரவில்லை.


எளிய இலக்கை வங்காளதேச அணி, தமிம் இக்பால் (81 ரன், 9 பவுண்டரி), சவும்யா சர்கார் (80 ரன், 5 பவுண்டரி, 5 சிக்சர்) ஆகியோரின் அதிரடியான அரைசதத்தின் உதவியுடன் 38.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.