ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி தடுமாற்றம்


ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி தடுமாற்றம்
x
தினத்தந்தி 14 Dec 2018 10:30 PM GMT (Updated: 14 Dec 2018 7:54 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி தடுமாறி வருகிறது.

மொகாலி,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழக அணி தனது 6-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் மொகாலியில் நேற்று தொடங்கியது. தடுமாற்றத்துடன் பேட்டிங்கை தொடங்கிய தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 84 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக விஜய் சங்கர் 71 ரன்னும், பாபா அபராஜித் 40 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் மன்பிரீத் கோனி 5 விக்கெட்டும், பால்தேஜ் சிங் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மும்பையில் நடைபெறும் பரோடா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய மும்பை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் முதல் இன்னிங்சில் 85.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 439 ரன்கள் குவித்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 178 ரன்னும் (139 பந்துகளில் 17 பவுண்டரி, 11 சிக்சருடன்), சித்தேஷ் லாத் 130 ரன்னும் விளாசினர். பரோடா அணி தரப்பில் பார்கவ் பாத் 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்

Next Story