கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல் அவுட் + "||" + Australia bowled out for 326

2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்

2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில், ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி  முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி சிறப்பான துவக்கம் பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் 3 பேட்ஸ்மேன்கள் நேற்று அரைசதம் அடித்தனர். கணிசமான ரன்களோடு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்து கொண்டிருந்தது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி  முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்து  இருந்தது.

இந்த நிலையில், 2-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 108.3 ஓவர்கள் தாக்கு பிடித்த ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக துவக்க வீரர் மார்கஸ் ஹரிஸ் 70 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சை துவங்கி பேட் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்
இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டதால் வெளியேற்றப்பட்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்.
2. ஆஸ்திரேலியாவில் பரிதாபம்: வீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் சாவு - மனைவி கவலைக்கிடம்
ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி கவலைக்கிடமாக உள்ளார்.
3. இந்தியாவை பிரிக்க விரும்புவது பாஜகதான்: மெகபூபா முப்தி
நச்சு கொள்கையை கடைப்பிடிக்கும் பாஜகதான், இந்த நாட்டை பிரிக்க விரும்புகிறது என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கூறினார்.
4. இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய ஏரி
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஏரி ஒன்று இயற்கையாக இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது.
5. இந்தியா வெளியிட்ட ரேடார் காட்சிகள் உண்மையானது இல்லை: பாகிஸ்தான் சொல்கிறது
இந்தியா வெளியிட்ட ரேடார் காட்சிகள் உண்மையானது இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.