கிரிக்கெட்

தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: பஞ்சாப் அணி முன்னிலை + "||" + Ranji Cricket Against Tamilnadu: Punjab Team Frontline

தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: பஞ்சாப் அணி முன்னிலை

தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: பஞ்சாப் அணி முன்னிலை
தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணி முன்னிலைபெற்றுள்ளது.
மொகாலி,

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - பஞ்சாப் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) மொகாலியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து தமிழக அணி முதல் இன்னிங்சில் 215 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.


பின்னர் தனது முதல் இன்னிங்சை அபாரமாக தொடங்கிய பஞ்சாப் அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்து 93 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சுப்மான் கில் 199 ரன்களுடனும் (21 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் மன்தீப்சிங் 50 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் பரோடாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. காயத்தில் இருந்து குணமடைந்து களம் திரும்பிய ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து மும்பைக்கு பதிலடி கொடுத்த பரோடா அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 244 ரன்கள் எடுத்துள்ளது.