கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபார வெற்றி + "||" + West Indies team win over 20 ODIs against Bangladesh

வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபார வெற்றி

வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபார வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபார வெற்றிபெற்றது. அந்த அணியில் ஷாய் ஹோப் 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
சியல்ஹெட்,

வங்காளதேசம்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சியல்ஹெட்டில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19 ஓவர்களில் 129 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஷகிப் அல்-ஹசன் 61 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ஷெல்டன் காட்ரெல் 4 விக்கெட்டும், கீமோ பால் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


பின்னர் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 10.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 55 ரன்கள் (23 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார். 25 வயது விக்கெட் கீப்பரான ஷாய் ஹோப் 16 பந்துகளில் (3 பவுண்டரி, 6 சிக்சர்) அரை சதத்தை எட்டினார். இதன் மூலம் அவர் சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிவேகமாக (குறைந்த பந்துகளில்) அரை சதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு இந்திய வீரர் யுவராஜ் சிங் (2007-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக) 12 பந்துகளிலும், நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ (2016-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக) 14 பந்துகளிலும் அரை சதம் அடித்து அதிவேகமாக அரை சதம் அடித்தவர்கள் வரிசையில் முறையே முதல் 2 இடத்தில் உள்ளனர்.