கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா சேர்ப்பு - பிரித்வி ஷா விலகல் + "||" + Mayank Agarwal, Haridih Pandya joining the Indian team for the remainder of the series against Australia - Pridvi Shah distortion

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா சேர்ப்பு - பிரித்வி ஷா விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா சேர்ப்பு - பிரித்வி ஷா விலகல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக பிரித்வி ஷா விலகினார்.
மும்பை,

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந் தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3-ந் தேதியும் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கணுக்காலில் காயம் அடைந்த தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. அவரது காயம் குணமடையாததால் எஞ்சிய 2 டெஸ்ட் போட்டியில் இருந்தும் அவர் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். செப்டம்பர் மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியின் போது காயம் அடைந்து சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி போட்டியில் களம் கண்டு 73 ரன்கள் எடுத்ததுடன், 7 விக்கெட்டும் வீழ்த்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். இருவரும் 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியா சென்று அணியினருடன் இணைய உள்ளனர். இந்த தகவல் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.