கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வீரர்கள் மேத்யூஸ், மென்டிஸ் சதம் + "||" + Test against New Zealand: Sri Lankan players Mathews, Mendis Century

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வீரர்கள் மேத்யூஸ், மென்டிஸ் சதம்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வீரர்கள் மேத்யூஸ், மென்டிஸ் சதம்
இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது.

வெலிங்டன், 

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 282 ரன்களும், நியூசிலாந்து 578 ரன்களும் சேர்த்தன. 296 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3–வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 20 ரன்களுடன் தத்தளித்தது.

இந்த நிலையில் 4–வது நாளான நேற்று இலங்கை வீரர்கள் மேத்யூசும், குசல் மென்டிசும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 6 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை அசைக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 2–வது இன்னிங்சில் 102 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்துள்ளது. 9–வது சதத்தை பூர்த்தி செய்த மேத்யூஸ் 117 ரன்களுடனும், 6–வது சதத்தை எட்டிய குசல் மென்டிஸ் 116 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தனர். இவர்கள் இதுவரை 4–வது விக்கெட்டுக்கு 577 பந்துகளை எதிர்கொண்டு 246 ரன்கள் திரட்டியுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப் இதுவாகும்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இலங்கை அணிக்கு இன்னும் 37 ரன்கள் தேவைப்படும் நிலையில், கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.