நியூசிலாந்து–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது


நியூசிலாந்து–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது
x
தினத்தந்தி 19 Dec 2018 9:30 PM GMT (Updated: 19 Dec 2018 9:14 PM GMT)

நியூசிலாந்து–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 282 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது.

வெலிங்டன், 

நியூசிலாந்து–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 282 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி டாம் லாதமின் இரட்டை சதத்தால் (ஆட்டம் இழக்காமல் 264 ரன்) 578 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. 296 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4–வது நாள் ஆட்டம் முடிவில் 102 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து இருந்தது. குசன் மென்டிஸ் 116 ரன்னுடனும், மேத்யூஸ் 117 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. குசல் மென்டிஸ், மேத்யூஸ் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். இலங்கை அணி 2–வது இன்னிங்சில் 115 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது குசல் மென்டிஸ் 141 ரன்னுடனும், மேத்யூஸ் 120 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 4–வது விக்கெட்டுக்கு இருவரும் 655 பந்துகளை சந்தித்து 274 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. மழை நீடித்ததால் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது. இதனால் இந்த போட்டி டிராவில் முடிந்தது. நேற்று 13 ஓவர்கள் மட்டுமே ஆட்டம் நடந்தது. மழையால் பாதிப்பு ஏற்படாவிட்டால் நியூசிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டு இலங்கை அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியது எனலாம். இவ்விரு அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 26–ந் தேதி ஹக்லே ஓவலில் தொடங்குகிறது.


Next Story