கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி + "||" + Against West Indies 20 Over cricket: Bangladesh team win

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.

டாக்கா, 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.

வங்காளதேசம் அதிரடி

வெஸ்ட் இண்டீஸ் – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்றிரவு நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச வீரர்கள், வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினர். 20 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் வங்காளதேசத்தின் 2–வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். லிட்டான் தாஸ் 60 ரன்களும் (34 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), மக்முதுல்லா 43 ரன்களும், கேப்டன் ‌ஷகிப் அல்–ஹசன் 42 ரன்களும் விளாசினர்.

அடுத்து மெகா இலக்கை நோக்கி களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. எதிர்பார்க்கப்பட்ட இவின் லீவிஸ் (1 ரன்), ஹெட்மயர் (19 ரன்) ஏமாற்றம் அளித்தனர். ரோவ்மன் பவெல் (50 ரன்), ஷாய் ஹோப் (36 ரன்), கீமோ பால் (29 ரன்) ஆகியோர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர்.

அல்–ஹசன் 5 விக்கெட்

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்களில் 175 ரன்களில் ஆல்–அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர் ‌ஷகிப் அல்–ஹசன் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆல்–ரவுண்டராக ஜொலித்த ‌ஷகிப் அல்–ஹசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை வங்காளதேச அணி 1–1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.