வங்காளதேச பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஆட சுமித்துக்கு தடை


வங்காளதேச பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஆட சுமித்துக்கு தடை
x
தினத்தந்தி 20 Dec 2018 9:41 PM GMT (Updated: 20 Dec 2018 9:41 PM GMT)

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது.

டாக்கா, 

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. மார்ச் மாதத்துடன் தடை காலம் முடிவுக்கு வருகிறது. ஆனாலும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

வருகிற 5–ந்தேதி தொடங்கும் 6–வது வங்காளதேச பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான கோமிலா விக்டோரியன்ஸ் அணியில் குணரத்னேவுக்கு பதிலாக ஸ்டீவன் சுமித் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ஒதுக்கீடு செய்யப்படும் மாற்று வீரர்களின் பட்டியலில் அல்லாத ஒருவரை ஒப்பந்தம் செய்வது என்பது விதிமீறல் என்று பெரும்பாலான அணிகளின் உரிமையாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த தொடரில் ஸ்டீவன் சுமித்தை விளையாட அனுமதிப்பது இல்லை என்று வங்காளதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.


Next Story