கிரிக்கெட்

பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது + "||" + 20 overs cricket match for school teams The day begins tomorrow in Chennai

பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது

பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது
20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நாளை மறுநாள் (24–ந் தேதி) தொடங்கி 29–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை, 

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சார்பில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் முத்தூட் குழுமம் ஆதரவுடன் பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நாளை மறுநாள் (24–ந் தேதி) தொடங்கி 29–ந் தேதி வரை நடக்கிறது. இதில் 16 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இதேபோல் கோவை, திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்ட போட்டியிலும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள், சென்னையில் நடைபெறும் போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இடையிலான இறுதி சுற்று போட்டி நெல்லையில் அடுத்த மாதம் (ஜனவரி) 22–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான பரிசு கோப்பை மற்றும் அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இந்திய அணி வீரர்கள் அம்பத்தி ராயுடு, மொகித் ‌ஷர்மா ஆகியோர் கலந்து கொண்டு கோப்பை மற்றும் சீருடையை அறிமுகப்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் பி.ரமேஷ் (விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்), சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், முத்தூட் நிறுவன துணை போதுமேலாளர் அபினவ் அய்யர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பிக்பாஷ் கிரிக்கெட்: மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி ‘சாம்பியன்’
பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
2. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயிர்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக இருக்காது. ஆனால் குறைந்தது என்னால் முடிந்த உதவியாக வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எனது பெயரில் உள்ள ‘ஷேவாக் சர்வதேச பள்ளி’யில் படிக்க வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார்.
4. இரானி கோப்பை கிரிக்கெட்: விதர்பா அணி 425 ரன்கள் குவிப்பு கார்னிவர் சதம் அடித்தார்
நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா, ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.
5. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேச அணியை எளிதில் வீழ்த்தியது, நியூசிலாந்து மார்ட்டின் கப்தில் சதம் அடித்தார்
நியூசிலாந்து–வங்காளதேச அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது.