கிரிக்கெட்

பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட்டில் கலக்கும் எலிஸ் பெர்ரி + "||" + Women in BigPash Cricket Shuffling Elise Berry

பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட்டில் கலக்கும் எலிஸ் பெர்ரி

பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட்டில் கலக்கும் எலிஸ் பெர்ரி
பெண்களுக்கான பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

சிட்னி, 

பெண்களுக்கான பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சிட்னியில் நேற்று நடந்த 24–வது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ்–பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த சிட்னி அணி 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. கேப்டன் எலிஸ் பெர்ரி 103 ரன்கள் (64 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி அவுட் ஆகாமல் இருந்தார். தொடர்ந்து ஆடிய பிரிஸ்பேன் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி தனது 5–வது வெற்றியை பெற்றது.

ரன் குவிப்பில் பிரமாதப்படுத்தும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயதான எலிஸ் பெர்ரி, இந்த சீசனில் அடித்த 2–வது சதம் இதுவாகும். முந்தைய 5 ஆட்டங்களில் முறையே 58, 102*, 74*, 10, 72* ரன் வீதம் நொறுக்கியுள்ள அவர் இதுவரை 419 ரன்கள் திரட்டி (சராசரி 209) அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.