கிரிக்கெட்

கடைசி 20 ஓவர் போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ் லீவிஸ் அதிரடி அரைசதம் + "||" + Over the last 20 overs Defeat the Bangladeshi team West Indies won the series

கடைசி 20 ஓவர் போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ் லீவிஸ் அதிரடி அரைசதம்

கடைசி 20 ஓவர் போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ் லீவிஸ் அதிரடி அரைசதம்
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்று தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டாக்கா, 

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்று தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

லீவிஸ் சிக்சர் மழை

வெஸ்ட் இண்டீஸ் – வங்காளதேசம் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ், எதிரணியின் பந்து வீச்சை பின்னியெடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் அபு ஹைதரின் ஒரே ஓவரில் 4 சிக்சர்களை பறக்க விட்ட அவர் 18 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷாய் ஹோப் 23 ரன்னிலும், அடுத்து வந்த ஹீமோ பால் 2 ரன்னிலும் வெளியேறினர். அந்த அணி 7.1 ஓவர்களில் 100 ரன்களை தாண்டியது. லீவிஸ் ஆடிய விதத்தை பார்த்த போது வெஸ்ட் இண்டீஸ் அணி 220 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்றே நினைக்கத் தோன்றியது.

அணியின் ஸ்கோர் 122 ரன்களாக உயர்ந்த போது, இவின் லீவிஸ் 89 ரன்களில் (36 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) மக்முதுல்லாவின் சுழற்பந்து வீச்சை முட்டிப்போட்டு அடிக்க முயற்சித்து கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த ஹெட்மயர் (0) எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். அதன் பிறகு வெஸ்ட் இண்டீசின் ரன்வேகம் வெகுவாக தளர்ந்தது. அடுத்து வந்த பேட்ஸ்மேன்களில் ரோவ்மன் பவெல்(19 ரன்), நிகோலஸ் பூரன் (29 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்களில் 190 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது. வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிஜூர் ரகுமான், ‌ஷகிப் அல்–ஹசன், மக்முதுல்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

அடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் (8 ரன்) ரன்–அவுட் ஆனார். இன்னொரு தொடக்க வீரர் லிட்டான் தாஸ் 43 ரன்களில் (25 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். லிட்டான் தாஸ் பெவிலியன் திரும்பியதும், வங்காளதேசத்தின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. நட்சத்திர வீரர்கள் கேப்டன் ‌ஷகிப் அல்–ஹசன் (0), விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் (1 ரன்) உள்ளூர் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

முடிவில் வங்காளதேச அணி 17 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வேகப்பந்து வீச்சாளர் கீமோ பால் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் பவுலரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

‘நோ–பால்’ சர்ச்சை

வங்காளதேச அணி பேட் செய்து கொண்டிருந்த போது 4–வது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஒஷானே தாமஸ் வீசினார். இதில் 5–வது பந்தை அவர் வீசிய போது நடுவர் தன்விர் அகமது (வங்காளதேசத்தை சேர்ந்தவர்) ‘நோ–பால்’ என்று அறிவித்தார். டி.வி. ரீப்ளேயில் ஒஷானே தாமசின் கால் சற்று கோட்டுக்கு உள்ளேயே இருப்பது தெரியவந்தது. நடுவரின் தவறான கணிப்பை கண்டு ஒஷானே தாமஸ் அதிருப்திக்குள்ளானார். இதன் மூலம் வழங்கப்பட்ட ‘பிரீஹிட்’டில் வங்காளதேச பேட்ஸ்மேன் லிட்டான் தாஸ் சிக்சர் அடித்தார். இதன் 6–வது பந்தையும் நடுவர் ‘நோ–பால்’ என்று தவறாக கூறிய போது, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கொந்தளித்தனர். நடுவரிடம் வாக்குவாதம் செய்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கார்லஸ் பிராத்வெய்ட், தங்களது வீரர்களிடம் அது பற்றி விவாதித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு வங்காளதேச கேப்டன் ‌ஷகிப் அல்–ஹசன், போட்டி நடுவர் ஜெப் குரோவ் ஆகியோர் மைதானத்திற்குள் வந்தனர். எல்லைக்கோடு அருகே நின்று பிராத்வெய்ட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடர்ந்து ஆட சம்மதித்தனர். இந்த சம்பவத்தால் 8 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.