கிரிக்கெட்

ஜடேஜா விவகாரம் குறித்து கிரிக்கெட் வாரியம் விளக்கம் + "||" + About Jadeja affair Cricket Board Description

ஜடேஜா விவகாரம் குறித்து கிரிக்கெட் வாரியம் விளக்கம்

ஜடேஜா விவகாரம் குறித்து கிரிக்கெட் வாரியம் விளக்கம்
ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்தியாவில் இருந்து கிளம்பும் போதே காயத்தில் தான் இருந்தார் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வெளிப்படுத்திய தகவல் சர்ச்சையை கிளப்பியது.
ல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்தியாவில் இருந்து கிளம்பும் போதே காயத்தில் தான் இருந்தார் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வெளிப்படுத்திய தகவல் சர்ச்சையை கிளப்பியது. காயமடைந்த வீரரை முக்கியமான இந்த தொடருக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழுவினர் எப்படி தேர்வு செய்தார்கள்? அதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், ‘நவம்பர் 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடந்த ரஞ்சி கிரிக்கெட்டில் பங்கேற்ற ஜடேஜா எந்த வித காயப் பிரச்சினையும் இன்றி 64 ஓவர்கள் பந்து வீசினார். அதைத் தொடர்ந்தே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணிக்கு தேர்வானார். சிட்னியில் நடந்த பயிற்சி கிரிக்கெட்டின் போது அவருக்கு இடது தோள்பட்டையில் பிரச்சினை ஏற்பட்டது. ஊசி போட்டு, ஓய்வு கொடுத்த நிலையில் அவரது தோள்பட்டையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, இப்போது 3-வது டெஸ்டில் விளையாட தயார் நிலையில் இருக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.