கிரிக்கெட்

மெல்போர்ன் டெஸ்ட்: முதல் நாளில் இந்திய அணி சிறப்பான ஆட்டம் + "||" + India vs Australia Highlights, 3rd Test Day 1: Cheteshwar Pujara, Virat Kohli Take India To 215/2 At Stumps On Day 1

மெல்போர்ன் டெஸ்ட்: முதல் நாளில் இந்திய அணி சிறப்பான ஆட்டம்

மெல்போர்ன் டெஸ்ட்: முதல் நாளில் இந்திய அணி சிறப்பான ஆட்டம்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மெல்போர்னில் இன்று துவங்கியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை  தேர்வு செய்தார். 

இதன்படி முதலில், பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஹனுமா விஹாரியும், மயங்க் அகர்வாலும் களம் இறங்கினார். 8 ரன்கள் மட்டுமே எடுத்த ஹனுமா விஹாரி பட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3-வது வீரராக களம் இறங்கிய புஜாரா, துவக்க வீரர் மயங்க் அகர்வாலுடன் இணைந்து நிதானமாகவும் அதேசமயம் பொறுப்புடனும் விளையாடினார். இதற்கு மத்தியில் சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 76 ரன்களில் பட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்து  வெளியேறினார். 

இதையடுத்து, கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். புஜாரா- விராட் கோலி ஜோடி கவனமாக விளையாண்டு மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர். முதல் நாளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஆட்டநேர முடிவில், 89 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 68 ரன்களுடனும் விராட் கோலி 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி ! ஐசிசியின் 3 கவுரவ விருதுகளை பெற்றார்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்த சிறந்த ஒருநாள் அணி, டெஸ்ட் அணி ஆகியவற்றுக்கு கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; விராட் கோலி சதம் விளாசல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி சதம் விளாசியுள்ளார்.
3. ராகுல்,பாண்ட்யாவின் கருத்தை இந்திய அணி ஆதரிக்கவில்லை: விராட் கோலி
ராகுல், பாண்ட்யாவின் கருத்தை இந்திய அணி ஆதரிக்கவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
4. என்னுடைய மிகப்பெரிய சாதனை : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது என்னுடைய மிகப்பெரிய சாதனை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
5. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி: தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை
புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்டில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...