கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய வீரர் புஜாரா சதம் + "||" + Pujara ton powers India on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய வீரர் புஜாரா சதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய வீரர் புஜாரா சதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்து அசத்தினார்.
மெல்போர்ன், 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளான நேற்று, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் சிறப்பான பேட்டிங்கை செய்தது. 

அறிமுக வீரர் மயங்க் அகர்வால் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 89 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்து இருந்தது. புஜாரா 68 ரன்களுடனும் (200 பந்து, 6 பவுண்டரி), விராட் கோலி 47 ரன்களுடனும் (107 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர். 

இந்த நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா - விராட் கோலி ஜோடி நம்பிக்கையூட்டும் விதத்தில் விளையாடியது. தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடிக்கும் 17-வது சதம் இதுவாகும். 

இந்திய அணி 116 ஓவர்கள் நிலவரப்படி 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 102 ரன்களுடனும் கோலி 68 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
2. தெலுங்கானாவை சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
தெலுங்கானாவை சேர்ந்த கோவர்தன் ரெட்டி என்பவர் அமெரிக்காவில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
3. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் - ரவிசங்கர் பிரசாத்
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
4. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயார் இஸ்ரேல் அறிவிப்பு
இந்தியா மிக முக்கிய நட்பு நாடு எனவும், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயாரக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
5. சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா அறிவுரை
சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா அறிவுரை வழங்கி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...