வெற்றி பெறவே உங்களுக்கு சம்பளம், விளையாடுவதற்கு இல்லை: கிரிக்கெட் வாரியம் கொடுத்த அழுத்தம் பற்றி விவரித்த ஸ்மித்


வெற்றி பெறவே உங்களுக்கு சம்பளம், விளையாடுவதற்கு இல்லை: கிரிக்கெட் வாரியம் கொடுத்த அழுத்தம் பற்றி விவரித்த ஸ்மித்
x
தினத்தந்தி 27 Dec 2018 3:37 AM GMT (Updated: 27 Dec 2018 3:37 AM GMT)

உண்மையில் பந்தை சேதப்படுத்த தூண்டியது யார்? என்பது குறித்து ஸ்மித் விளக்கம் அளித்துள்ளார்.

சிட்னி,
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் கடந்த மார்ச் மாதம் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் சொரசொரப்பு காகிதத்தை கொண்டு பந்தை தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயற்சித்த போது கையும் களவுமாக சிக்கினார். இதற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் அம்பலமானது. இதையடுத்து ஸ்டீவன் சுமித், வார்னருக்கு ஓராண்டும், பான்கிராப்டுக்கு 9 மாதங்களும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.

இந்த நிலையில் பந்தை சேதப்படுத்த தன்னை தூண்டியது, டேவிட் வார்னர்தான் என்று சமீபத்தில் பேட்டி அளித்த பேன்கிராப்ட் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஸ்டீவன் ஸ்மித் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அளித்த அழுத்தம் பற்றி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஸ்டீவன் ஸ்மித் கூறியிருப்பதாவது:-

நவம்பர் 2016, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஹோபார்ட் டெஸ்ட்டில் தோல்வி அடைந்தவுடன், வீரர்கள் அறைக்கு வந்த கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ஜேம்ஸ் சதர்லேண்ட், பாட் ஹோவர்ட்  ஆகிய இருவரும், ‘வெற்றி பெறவே உங்களுக்குச் சம்பளம், வெறுமனே விளையாட மட்டுமல்ல’ என்று கூறினார். இது கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தது, யாரும் தோற்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு களமிறங்குவதில்லை.

இப்போதைக்கு அணியின் கேப்டனாக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை, மீண்டும் ஆஸ்திரேலியாவுக்காக ஆடவேண்டுமென்பதே பிரதானம்.  டிம் பெய்ன் தலைமையின் கீழ் ஆடவும் விருப்பமாகவே இருக்கிறேன்.  உலகக்கோப்பையில் பிஞ்ச் தலைமையில் ஆடவும் விரும்புகிறேன்.  இப்போதைக்கு இதுதான் என் குறிக்கோள் அதை நோக்கித்தான் ஆடிக்கொண்டிருக்கிறேன்” என்றார். 

Next Story