கிரிக்கெட்

டிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி + "||" + Dravid record Kohli broke

டிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி

டிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி
மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (68 ரன்), கேப்டன் விராட் கோலி (47 ரன்) களத்தில் இருந்தனர்.

* இந்த தொடரில் புஜாரா இதுவரை 328 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு வெளிநாட்டு தொடரில் அவர் சேர்த்த அதிகபட்ச ரன்கள் இது தான். இதற்கு முன்பு கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த தொடரில் அவர் 309 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

* 30 வயதான புஜாரா இந்த டெஸ்டில் மூன்று இலக்கத்தை தொட 280 பந்துகளை சந்தித்தார். அவரது மந்தமான செஞ்சுரி இது தான். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 248 பந்துகளில் எட்டிய சதமே மெதுவான சதமாக இருந்தது. 17-வது சதத்தை சுவைத்த புஜாரா, அதிக சதங்கள் அடித்த இந்தியர்களின் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ளிவிட்டு வெங்சர்க்கார், வி.வி.எஸ்.லட்சுமண் (தலா 17 சதம்) ஆகியோருடன் 7-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

* இந்திய கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டில் வெளிநாட்டு மண்ணில் இதுவரை 1,138 ரன்கள் சேர்த்துள்ளார். ஒரு ஆண்டில் வெளிநாட்டில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதுவரை இந்த சிறப்பு ராகுல் டிராவிட்டிடம் (2002-ம் ஆண்டில் 1,137 ரன்) இருந்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், தென்ஆப்பிரிக்காவின் கிரேமி சுமித் வசமே இச்சாதனை (2008-ம் ஆண்டில் 1,212 ரன்) உள்ளது. 2-வது இன்னிங்சில் கோலி 75 ரன்கள் எடுத்தால், அந்த அரிய சாதனையும் தவிடுபொடியாகி விடும்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு
ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிக்கிறார்கள்.