கிரிக்கெட்

மெல்போர்ன் டெஸ்ட் :2-வது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்ப்பு + "||" + India lead by 346 runs

மெல்போர்ன் டெஸ்ட் :2-வது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்ப்பு

மெல்போர்ன் டெஸ்ட் :2-வது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்ப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வலுவான நிலையை எட்டியுள்ளது.
மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, புஜாராவின் (106 ரன்கள்) அபார சதம், விராட் கோலியின் 82 ரன்கள், ரோகித் சர்மாவின் 63 ரன்கள் ஆகியவற்றின் உதவியால்  400 ரன்களை கடந்தது.  169.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை  ‘டிக்ளேர்’ செய்தது. 

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. பும்ராவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல நிலைகுலைந்தன. 66.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 151 ரன்களில் ஆட்டமிழந்தது.  ஆஸ்திரேலிய அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் 25 ரன்களை கூட எட்டவில்லை. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை அள்ளினார். 

இதையடுத்து, 292 ரன்கள் முன்னிலையுடன் 2-து இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஹனுமா விஹாரி (13 ரன்கள்) புஜாரா (0), விராட் கோலி (0), ரகானே (1 ரன்), ரோகித் சர்மா ( 5 ரன்கள்) என அடுத்தடுத்து சில நிமிடங்கள் கூட களத்தில் நிற்காமல் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர். துவக்க வீரர் மயங்க் அகர்வால் மட்டும் தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொண்டார். 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 346 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.  மயங்க் அகர்வால் 28 ரன்களுடனும் ரிஷாப் பாண்ட் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

2-வது இன்னிங்சில் அடுத்தடுத்து இந்தியா விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறினாலும், இந்த டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டையாடப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினர் உஷார்
இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் ரோந்து பணியை மேற்கொள்கிறது.
3. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
4. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு
இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
5. இந்தியாவிலும் 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு
இந்தியாவில் 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டமிட்டுள்ளதாக அணுசக்தி துறை தலைவர் கூறியுள்ளார்.