இலங்கைக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி 585 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’


இலங்கைக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி 585 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’
x
தினத்தந்தி 28 Dec 2018 10:30 PM GMT (Updated: 28 Dec 2018 7:03 PM GMT)

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

கிறைஸ்ட்சர்ச்,

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 178 ரன்களும், இலங்கை 104 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்றும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நீடித்தது. 8-வது சதத்தை எட்டிய டாம் லாதம் 176 ரன்களும், 4-வது சதத்தை நிறைவு செய்த ஹென்றி நிகோல்ஸ் 162 ரன்களும் (நாட்-அவுட்), கிரான்ட்ஹோம் 71 ரன்களும் விளாசினர். நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 660 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

Next Story