கிரிக்கெட்

மெல்போர்ன் டெஸ்ட்; மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு + "||" + Melbourne Test; Match delayed by rain

மெல்போர்ன் டெஸ்ட்; மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு

மெல்போர்ன் டெஸ்ட்; மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 5வது நாளில் மழையால் ஆட்டம் தொடங்குவது பாதிப்படைந்து உள்ளது.
மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது.

ஆஸ்திரேலியாவுக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காமல் 292 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் (28 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (6 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது.  இந்திய அணி 2-வது இன்னிங்சில் 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்று ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு மேற்கொண்டு 141 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 2 விக்கெட் மட்டுமே உள்ளது.  5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.  இந்த நிலையில் மழையால் ஆட்டம் தொடங்குவது பாதிக்கப்பட்டு உள்ளது.  தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் உணவு இடைவேளை விடப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உப்பிலியபுரம் அருகே மின்னல் தாக்கிய இடத்தில் பெருக்கெடுத்த தண்ணீரால் பொதுமக்கள் வியப்பு
திருச்சி அருகே மின்னல் தாக்கிய இடத்தில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்ததால் பொதுமக்கள் வியப்படைந்தனர்.
2. சென்னை, சேலம் மற்றும் திருவள்ளூரில் பரவலாக மழை
சென்னை, சேலம் மற்றும் திருவள்ளூரில் பரவலாக மழை பெய்து வருகிறது.
3. திருமருகல் பகுதியில் திடீர் மழை நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் கவலை
திருமருகல் பகுதியில் திடீரென பெய்த மழையால் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தநெல் மூட்டைகள் நனைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
4. இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: 4வது நாளில் மழையால் ஆட்டம் பாதிப்பு
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 4வது நாளான இன்று உணவு இடைவேளை வரை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.
5. இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு; ஆஸ்திரேலியா 236/6 (83.3 ஓவர்கள்)
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது.