கிரிக்கெட்

கடைசி டெஸ்டில் இலங்கையை பந்தாடி நியூசிலாந்து அணி இமாலய வெற்றி + "||" + New Zealand team in the last Test of Sri Lanka Himalayan success

கடைசி டெஸ்டில் இலங்கையை பந்தாடி நியூசிலாந்து அணி இமாலய வெற்றி

கடைசி டெஸ்டில் இலங்கையை பந்தாடி நியூசிலாந்து அணி இமாலய வெற்றி
கடைசி டெஸ்ட் போட்டியில், இலங்கையை பந்தாடி நியூசிலாந்து அணி இமாலய வெற்றிபெற்றது.
கிறைஸ்ட்சர்ச்,

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 178 ரன்களும், இலங்கை 104 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 4 விக்கெட்டுக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ததுடன், 660 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து, தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது.


இந்த நிலையில் கடைசி நாளான நேற்று ஆடிய இலங்கை அணி எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் 14 பந்துகளில் பறிகொடுத்து 236 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தசைப்பிடிப்பு காரணமாக மேத்யூஸ் பேட் செய்ய வரவில்லை. இதன் மூலம் நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றதோடு தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தின் மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்தது. அதே சமயம் டெஸ்டில் இலங்கை அணியின் மிக மோசமான தோல்வி இதுவாகும். நியூசிலாந்து அணி, தொடர்ச்சியாக வசப்படுத்திய 4-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி (107 புள்ளி) ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசை பட்டியலில் தென்ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு 3-வது இடத்துக்கு முன்னேறியது. இந்தியா 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 5-வது இடத்திலும் உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினர் உஷார்
இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் ரோந்து பணியை மேற்கொள்கிறது.
2. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. ஈஸ்டர் பண்டிகை தினத்தில் இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு - பலி எண்ணிக்கை 215 ஆக உயர்வு
ஈஸ்டர் பண்டிகை தினமான நேற்று இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பலி எண்ணிக்கை 215ஆக உயர்ந்தது.
4. நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி
நாகர்கோவிலில் தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
5. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு
இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.