கிரிக்கெட்

இந்த ஆண்டின் ஐசிசி-யின் இரண்டு விருதுகளை தட்டிச் சென்ற ஸ்மிரிதி மந்தனா + "||" + Smriti Mandhana named ICC Women’s Cricketer of the Year

இந்த ஆண்டின் ஐசிசி-யின் இரண்டு விருதுகளை தட்டிச் சென்ற ஸ்மிரிதி மந்தனா

இந்த ஆண்டின் ஐசிசி-யின் இரண்டு விருதுகளை தட்டிச் சென்ற  ஸ்மிரிதி மந்தனா
இந்திய பெண்கள் அணியின் முன்னணி வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா ஐசிசி-யின் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார்.
துபாய்,

ஆண்டுதோறும் பெண்கள் கிரிக்கெட்டில் சாதித்த வீராங்கனைகளுக்கு விருது வழங்கி  ஐசிசி கவுரவித்து வருகிறது. 2018-ம் ஆண்டில் சாதித்த வீராங்கனைகளுக்கான விருது பட்டியலை இன்று அறிவித்தது.

இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஐசிசி-யின் இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கான சிறந்த வீராங்கனை ஆகிய விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே ஹீலி சிறந்த 20 ஓவர்  கிரிக்கெட் வீராங்கனை விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.