கிரிக்கெட்

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பைக்கு பறந்த ரோகித் சர்மா + "||" + New Father Rohit Sharma Leaves For Mumbai, Will Miss Fourth Test

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பைக்கு பறந்த ரோகித் சர்மா

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பைக்கு பறந்த ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா - ரித்திகா சஜ்தே தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
மும்பை,

இந்திய கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும்  ரோகித் சர்மா கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி ரித்திகா சஜ்தேவை திருமணம் செய்து கொண்டார். 

ரோகித் சர்மா விளையாடிய பல்வேறு கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு  ரித்திகா  சஜ்தே நேரில் வருவார். 200 ரன் அடிக்கும் போது, மனைவி அணிவித்த மோதிரத்தை முத்தமிட்டு கொண்டாடியது அவர் ரித்திகா  சஜ்தே மீது வைத்திருந்த அன்பை காட்டியது.   

இந்நிலையில் ரோகித் சர்மா - ரித்திகா சஜ்தே தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில்  அவர் நேற்று,  ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்று விட்டார்.  

இதனையடுத்து சிட்னி மைதானத்தில் நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. 

அதோடு அவர் ஜனவரி 8-ம் தேதி மீண்டும் இந்திய அணியில் இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.  பெண் குழந்தை பிறந்துள்ள ரோகித் சர்மா - ரித்திகா சஜ்தே தம்பதிக்கு சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.