இந்த ஆண்டில் 9 டெஸ்டில் ஆடுகிறது, இந்தியா


இந்த ஆண்டில் 9 டெஸ்டில் ஆடுகிறது, இந்தியா
x
தினத்தந்தி 1 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-02T03:57:18+05:30)

இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் விளையாடும் போட்டித் தொடர்கள் விவரம் வெளியாகியுள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் விளையாடும் போட்டித் தொடர்கள் விவரம் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் கடைசி டெஸ்டில் (ஜனவரி 3–7) களம் காணும் இந்திய அணி அதன் பிறகு அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகளில் மோதுகிறது. அதை முடித்துக்கொண்டு அங்கிருந்து நியூசிலாந்துக்கு செல்லும் இந்திய அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. பின்னர் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் (பிப்ரவரி–மார்ச்) மல்லுகட்டுகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி சொந்த மண்ணில் ஜிம்பாப்வேவுடன் ஒரு டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டிகளில் (மார்ச்) ஆடுகிறது. அதைத் தொடர்ந்து மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்கிறது.

ஜூலை–ஆகஸ்டில் வெஸ்ட் இண்டீசை அவர்களது இடத்தில் சந்திக்கும் இந்திய அணி (2 டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி) அதன் பிறகு தாயகம் திரும்பி தென்ஆப்பிரிக்காவை மூன்று டெஸ்டுகளில்(அக்டோபர்–நவம்பர்) எதிர்கொள்கிறது. தென்ஆப்பிரிக்கா இங்கிருந்து கிளம்பியதும் வங்காளதேச அணி இந்தியாவுக்கு பயணித்து 2 டெஸ்ட், மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. டிசம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு வந்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது.


Next Story