கிரிக்கெட்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆயிரத்திற்கும் அதிகமான பந்துகளை சந்தித்து புஜாரா சாதனை + "||" + In the Australian Test series Pujara's achievement with more than a thousand balls

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆயிரத்திற்கும் அதிகமான பந்துகளை சந்தித்து புஜாரா சாதனை

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆயிரத்திற்கும் அதிகமான பந்துகளை சந்தித்து புஜாரா சாதனை
இந்திய வீரர் 30 வயதான புஜாரா சிட்னி டெஸ்டில் 130 ரன்கள் (250 பந்து) குவித்து அமர்க்களப்படுத்தியுள்ளார்.

*இந்திய வீரர் 30 வயதான புஜாரா சிட்னி டெஸ்டில் 130 ரன்கள் (250 பந்து) குவித்து அமர்க்களப்படுத்தியுள்ளார். இந்த ஆஸ்திரேலிய தொடரில் புஜாரா இதுவரை 3 சதம், ஒரு அரைசதம் உள்பட 458 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இதற்காக அவர் 1,135 பந்துகளை சந்தித்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் ஆயிரம் பந்துகளுக்கு மேல் சந்தித்த 5–வது இந்தியராக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

இதற்கு முன்பு 1947–48–ம் ஆண்டு தொடரில் விஜய் ஹசாரே (1,192 பந்து), 1977–78–ம் ஆண்டு தொடரில் சுனிஸ் கவாஸ்கர் (1,032 பந்து), 2003–04–ம் ஆண்டு தொடரில் ராகுல் டிராவிட் (1,203 பந்து), 2014–15–ம் ஆண்டு தொடரில் விராட் கோலி (1,093 பந்து) ஆகிய இந்தியர்கள் ஏற்கனவே ஆயிரத்திற்கும் அதிகமான பந்துகளை சமாளித்த சாதனையாளர்கள் ஆவர்.

*நடப்பு தொடரில் புஜாரா 4 இன்னிங்சில் 200 பந்துகளுக்கு மேல் சந்தித்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இதற்கு முன்பு வேறு எந்த இந்தியரும் (கவாஸ்கர் 3 முறை) செய்திராத ஒரு சாதனையாக இது அமைந்துள்ளது.

*இந்த தொடரில் புஜாரா அடித்த 3–வது சதம் இதுவாகும். ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு தொடரில் மூன்று மற்றும் அதற்கு மேல் சதங்கள் அடித்த 3–வது இந்தியர் புஜாரா ஆவார். ஏற்கனவே விராட் கோலி 4 சதங்களும் (2014–15) சுனில் கவாஸ்கர் 3 சதங்களும் (1977–78) விளாசியுள்ளனர்.

*ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) இந்திய கேப்டன் விராட் கோலி 19,012 ரன்கள் (399 இன்னிங்ஸ்) குவித்து இருக்கிறார். இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சிறப்பை கோலி பெற்று இருக்கிறார். இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர் 432 இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது.