கிரிக்கெட்

என்னுடைய மிகப்பெரிய சாதனை : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி + "||" + "By Far This Is My Best Achievement": Virat Kohli Rates Test Series Win In Australia Above World Cup Victory

என்னுடைய மிகப்பெரிய சாதனை : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி

என்னுடைய மிகப்பெரிய சாதனை : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது என்னுடைய மிகப்பெரிய சாதனை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்  தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 71 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தொடரை வென்றதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

டெஸ்ட் தொடரை வென்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:- “ கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட் தான் மதிப்புமிக்க ஒரு  ஃபார்மட்  என்ற செய்தியை பரப்ப விரும்புகிறோம். டெஸ்ட் கிரிக்கெட் ஒரு நபராக உங்களை மேம்படுத்துகிறது. டெஸ்ட் கிரிக்கெட் நீடிக்கும் வரை, இந்த விளையாட்டும் நீடிக்கும்.

ஆஸ்திரேலிய மண்ணில் 72 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை வென்றது என்னுடைய மிகப்பெரிய சாதனை. இந்திய அணிக்கு சர்வதேச அளவில் வித்தியாசமான தோற்றத்தை இந்த வெற்றி அளித்திருக்கிறது. எங்களுடைய மாற்றம் இங்கிருந்து தொடங்குகிறது.

நான் கேப்டனாக பொறுப்பேற்றபோது, 4 ஆண்டுகளுக்குப் பின் ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்கிறேன். இந்த அணியை வழிநடத்திச் செல்வதில் நான் பெருமைப்படுகிறேன், எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம், சிறப்புரிமையாக கருதுகிறேன். என்னை மிகச்சிறந்த கேப்டனாக அணி வீரர்கள் மாற்றி இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி எங்களுக்கு வித்தியாசமான அடையாளத்தை அளித்திருக்கிறது. எங்களால் சாதிக்க முடியும் என்பதை வெளிக்காட்டி இருக்கிறது, பெருமைப்பட வைத்துள்ளது.” இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது - இங்கிலாந்து நாடாளுமன்ற குழு
இந்தியாவுடனான பெரும்பாலான உறவுகளை மேற்கொள்ள இங்கிலாந்து தனது வாய்ப்பை தவறவிட்டது என்று பிரிட்டிஷ் குழு தெரிவித்துள்ளது!!
2. கிரிக்கெட் போட்டியில் விதிமீறல்; விராட் கோலிக்கு 25% அபராதம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டது.
3. பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி? மலிங்கா விளக்கம்
பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு
பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
5. ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்: சக வீரர்களுக்கு பாக்.கேப்டன் எச்சரிக்கை
நாடு திரும்பும் போது ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று சக வீரர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...