கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி வீரர் அபினவ் முகுந்த் சதம் அடித்தார் + "||" + In Ranji Cricket, Abhinav Mukund scored centuries

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி வீரர் அபினவ் முகுந்த் சதம் அடித்தார்

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி வீரர் அபினவ் முகுந்த் சதம் அடித்தார்
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி வீரர் அபினவ் முகுந்த் சதம் அடித்தார்.
சென்னை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை சந்தித்தது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. அபினவ் முகுந்த் 104 ரன்னுடனும், விஜய் சங்கர் 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


திரிபுரா-ராஜஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் அகர்தலாவில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய திரிபுரா அணி முதல் இன்னிங்சில் 35 ரன்னில் சுருண்டது. இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ராஜஸ்தான் அணி 218 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய திரிபுரா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்தது.